டீம்ல எல்லாரும் அத பண்ணாங்க; என்ன மட்டும் தான் கேவலப்படுத்தினாங்க - பிரவீன் குமார் வேதனை!

Cricket India Indian Cricket Team Sports
By Jiyath Jan 09, 2024 09:45 AM GMT
Report

தனது பெயர் மட்டும் தான் கேவலப்படுத்தப்பட்டதாக முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

பிரவீன் குமார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக வலம் வந்தவர் பிரவீன் குமார். இந்திய அணியில் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதான பவுலராக இருந்தார்.

டீம்ல எல்லாரும் அத பண்ணாங்க; என்ன மட்டும் தான் கேவலப்படுத்தினாங்க - பிரவீன் குமார் வேதனை! | Praveen Kumar Shares Dark Secret Of Team India

இதுவரை 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை பிரவீன்குமார் வீழ்த்தியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிரவீன் குமார், தற்போது இந்திய அணியின் இருண்ட ரகசியத்தை குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியதாவது "நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள்.

துயரத்தை கொடுத்தது

இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது. சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர்.

டீம்ல எல்லாரும் அத பண்ணாங்க; என்ன மட்டும் தான் கேவலப்படுத்தினாங்க - பிரவீன் குமார் வேதனை! | Praveen Kumar Shares Dark Secret Of Team India

ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறான செய்தியை பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட என்னை தேர்வு செய்யவில்லை. இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.