கமல் பட பிரபல நடிகர் திடீரென மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

death actor shock news praveen-kumar-chopthi fans sad
By Nandhini Feb 08, 2022 07:54 AM GMT
Report

கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியாகி ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் பாடிகார்ட் கேரக்டரில் நடித்த நடிகர் பிரவீன் குமார் சோப்தி (75) உயிரிழந்தார்.

இவரின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அப்படத்தில் நடித்த ‘பீம்பாய்’ கேரக்டரை யாராலும் மறக்க முடியாது. அளவுக்கு அதிகமான உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ஹிந்தி திரைப்படங்களிலும், ‘மகாபாரதம்’ என்ற சீரியலில் பீமன் கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார் பிரவீன் குமார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் பிரவீன் குமார்.

ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று இவர் பல பதக்கங்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அரசியலிலும் களம் புகுந்தார் பிரவீன். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த இவர் 2013ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு பாஜகவில் இணைந்து பணியாற்றினார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பிரவீன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரின் இறப்பு செய்தி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய இறப்புக்கு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியர் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல் பட பிரபல நடிகர் திடீரென மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி | Praveen Kumar Chopthi Actor Death Fans Sad