பிக்பாஸ் வீட்டில் பயங்கர சண்டை - பொருட்களை அடித்து நொறுக்கிய போட்டியாளர்கள்

biggboss15 pratiksehajpal
By Petchi Avudaiappan Oct 08, 2021 11:26 PM GMT
Report

பிக்பாஸ் 15வது சீசனில் பயங்கர சண்டை ஏற்பட்டு ஜன்னல் கண்ணாடி, பொருட்களை எல்லாம் போட்டியாளர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது சீசன் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போன்றே இந்த சீசனிலும் பிரச்சனைகளுக்கு குறைவே இல்லாமல் இருக்கிறது.

இதனை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 3 ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது. இதனிடையே இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டில் இருக்கும் ப்ரதிக் செஹஜ்பல் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் கோபப்பட்டு சண்டை போட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்கின்போது ஜெய் பனுஷாலியிடம் அவர் மோதினார் . இதனால் கோபம் அடைந்த ஜெய் கேமரா முன்பு வந்து நின்று அந்த ஆள் என்னை தொட்டால் அவ்வளவு தான் என்றார். இதையடுத்து பிற போட்டியாளர்கள் ப்ரதிக் மற்றும் ஜெய்யை சமாதானம் செய்தார்கள்.

மேலும் ஜெய் மட்டும் அல்ல உமர் ரியாஸுடனும் ப்ரதிக் சண்டை போட்டார் . பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரையும் அவர் சும்மாவிடுவதாக இல்லை. ப்ரிதக் செய்த கலாட்டாவால் கடுப்பான சக போட்டியாளர்கள் ஜன்னல் கண்ணாடி மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினார்கள்.

திட்டியது, பிக் பாஸ் வீட்டு பொருட்களை சேதப்படுத்தியதற்காக வார இறுதி நாட்களில் வரும் சல்மான்கான் நிச்சயம் டோஸ் விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.