ஓரம் கட்டப்படும் இஷாந்த் சர்மா - 4வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் புதிய பவுலர் ?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் திடீரென பிரசீத் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ந்த போட்டியில் இந்திய அணி நிச்சயம் ஒரு சில மாற்றங்களுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் பேட்ஸ்மேன், பவுலர் என அனைத்து பிரிவிலும் வீரர்கள் சொதப்பி வருவதால் 4வது போட்டிக்கான மாற்றம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனிடையே யாருமே எதிர்பாராத வகையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் பிரசீத் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வரும் சீனியர் வீரர் இஷாந்த் சர்மா இப்போட்டியில் இடம் பெற மாட்டார் என்ற தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரசீத் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் சீனியர் வீரர்கள் மீதுள்ள பணிச்சுமையை குறைக்கும் விதமாக தான் பிரசீத் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துள்ளதாக அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருணே தெரிவித்துள்ளார். மேலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.