49 வயதில் பிரசாந்திற்கு 2வது திருமணம் - தந்தை தகவல்!

Prashanth Tamil Cinema Marriage
By Sumathi Apr 09, 2023 06:50 AM GMT
Report

நடிகர் பிரசாந்திற்கு 2வது திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த்

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகர் பிரசாந்த். 17 வயதிலேயே, தன்னுடைய அழகாலும், துறுதுறு நடிப்பாலும் பல இளம் ரசிகைகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.

49 வயதில் பிரசாந்திற்கு 2வது திருமணம் - தந்தை தகவல்! | Prashanth Second Marriage Says Father Thiyagarajan

வண்ண வண்ண பூக்கள், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஜீன்ஸ், திருடா திருடா, ஸ்டார், வின்னர் என1990 முதல் 2005 வரை அஜித் - விஜய்க்கு இணையான, ஹீரோவாக செம்ம டஃப் கொடுத்து வந்தார்.

2வது திருமணம்? 

தொடர்ந்து, பிரஷாந்துக்கும் - கிரஹலட்சுமி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. 3 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தவர்கள் விவாகரத்து பெற்றனர்.

49 வயதில் பிரசாந்திற்கு 2வது திருமணம் - தந்தை தகவல்! | Prashanth Second Marriage Says Father Thiyagarajan

அதன்பின், இவர் நடிப்பில் வெளியான, ஜாம்பவான், தகப்பன்சாமி, புலன் விசாரணை 2, சாகசம், ஜானி போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இந்நிலையில், பிரசாந்தின் தந்தை தியாகராஜன், பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள, அந்தகன் திரைப்படம் வெளியானதும், அவரின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.