சினிமா விமர்சகர் பிரசாந்த் பற்றி பரவும் புதிய தகவல் - ட்விட்டரில் தொடரும் சண்டை

bluesattaimaran itsmeprasanth PrashanthRangaswamy ManobalaVijayabalan
By Petchi Avudaiappan Mar 25, 2022 12:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

திரைப்பட யூடியூப் விமர்சகரும், நடிகருமான பிரசாந்த் மற்றும் டிராக்கர் மனோபாலா இடையே கடும் வார்த்தை மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

சினிமா விமர்சகர்கள் என்றும் டிராக்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபலங்கள் சமீப காலமாக கடும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வலிமை படம் வெளியானதில் இருந்தே இந்த மோதல் வெட்ட வெளிச்சமாக மாறத் தொடங்கியது எனலாம். 

வலிமை படத்துக்கு யூடியூப் விமர்சகர்கள் அனைவரும் எல்லை மீறிய வெறுப்பு உணர்வை உமிழ்ந்தது ஒருபுறம் காரணமாக கூறப்படுகிறது. சினிமா டிராக்கர் மனோபாலா வலிமை, எதற்கும் துணிந்தவன் மற்றும் ராதே ஷ்யாம் என சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் நிலவரங்களை பதிவிட்டு வருகிறார்.இது பொய் என விமர்சகர்கள் ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். 

சினிமா விமர்சகர் பிரசாந்த் பற்றி பரவும் புதிய தகவல் - ட்விட்டரில் தொடரும் சண்டை | Prashanth Rangaswamy Twitter Hashtag Trend

இதனால் கடுப்பான மனோபாலா ப்ளூசட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படம் டோட்டல் வாஷ் அவுட் என கூற பிரச்சனை வெடித்தது. இந்த பிரச்சனை தற்போது மனோபாலா vs பிரசாந்த் ஆக மாறியிருக்கிறது. கடந்த சில நாட்களாக விஜய்யின் பீஸ்ட் படம் கே.ஜி.எஃப் படத்திற்கு பயந்து ஒருநாள் முன்கூட்டியே ரிலீஸ் ஆவதாக மனோபாலா போட்ட ட்வீட் பிரசாந்தை கோபமாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்ட வைத்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் ட்விட்டரில் #SaveGirlsFromPrashanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனை மனோபாலாவும் பதிவிட்டுள்ளார். இந்த ஹேஸ்டேக்கில் பிரசாந்த் பெண்களிடம் ஆபாசமாக உரையாடியதாக பல பதிவுகள் போடப்படுகிறது. பலரும் பிரசாந்த் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.