பிரஷாந்த்தின் ‘அந்தகன்’படத்திற்கு டப்பிங் பணிகள் துவக்கம் - வைரலாகும் புகைப்படங்கள்
பிரஷாந்த்தின் ‘அந்தகன்’படத்திற்கு நடிகை பிரியா ஆனந்த் டப்பிங் பணிகளை துவக்கியுள்ளார்.
தேசிய விருதுகளை குவித்த அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் திரைப்படத்தில் நடிகர் பிரஷாந்த் நடித்துள்ளார்.
இந்த படத்தை பிரஷாந்தின் தந்தையான தியாகராஜனே இயக்கியுள்ளார். மேலும் அந்தாதூன் படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
மேலும் இந்த படத்திற்கு மெருகேட்டும் விதமாக நடிகர் சமுத்திரகனி, நடிகை வனிதா விஜயகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
டப்பிங்கில் நடிகர் கார்த்திக், லீலா சம்சன், பூவையார், மனோ பாலா, நடிகர் பிரஷாந்த் உள்ளிடோர் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பிரியா ஆனந்த் டப்பிங் பணிகளை துவக்கியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
