இன்னும் பத்து வருடத்திற்கு பாஜகதான் , ராகுலுக்குதான் தெரியவே மாட்டேங்குது - பிரசாந்த் கிஷோர்
இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவாக இருக்கும் என ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவா அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசினார்.
அதில், சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ அதேபோல வரவிருக்கும் ஆண்டுகளில் பாஜக இருக்கும். இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால் அக்கட்சியை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது.
மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பாஜக எங்கும் போகாது. மோடியை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால், அது நடக்காது என கூறியுள்ள பிரசாந் கிஷோர்.
Eventually, Prashant Kishor acknowledged that BJP will continue to be a force to reckon with in Indian politics for decades to come.
— Ajay Sehrawat (@IamAjaySehrawat) October 28, 2021
That's what @amitshai Ji declared way too earlier. pic.twitter.com/wqrqC3xzaZ
பாஜகவுடன் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் பாஜக மையமாக இருக்கும்.
மோடியின் வலிமையை அறிந்து கொள்ளாதவரை மோடியின் இடத்துக்கு ராகுல்காந்தியால் வரமுடியாது. அவரை தோற்கடிக்கவும் முடியாது. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜகவை எதிர்த்து போராட வேண்டியதிருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி குறித்து பிரசாந்த கிஷோர் தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு ஏற்பட்ட அதிருப்தி தெரியவந்துள்ளது