‘10 வருஷம் அனுபவம் இருக்கு, என் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்’ - புது ரூட்டு போடும் பிரஷாந்த் கிஷோர் ?

By Swetha Subash May 02, 2022 06:14 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

2014 மக்களவை தேர்தலில் தனது தேர்தல் வியூகத்தால் பாஜக-வை வெற்றி பெற செய்ய வைத்தது தொடங்கி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டுபவர் பிரசாந்த் கிஷோர்.

இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்தார்.

‘10 வருஷம் அனுபவம் இருக்கு, என் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்’ - புது ரூட்டு போடும் பிரஷாந்த் கிஷோர் ? | Prashant Kishore Starting New Political Party

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் காங்கிரஸ் தரப்பு விளக்கம் தெரிவித்தது.

இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்குமான எனது தேடலானது 10 வருட (பிரதமர் மோடி தலைமையிலான அரசு) ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது.

தற்போது மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சியை பிரசாந்த் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.