இந்திக்கார பய.. சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை - கொந்தளித்த பிரசாந்த் கிஷோர்

Tamil nadu Viral Video Seeman Prashant Kishor
By Sumathi Mar 10, 2023 01:30 PM GMT
Report

சீமான் வீடியோவை பகிர்ந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் வீடியோ

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வடமாநில தொழிலாளர்களை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அதில், இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான்.

இந்திக்கார பய.. சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை - கொந்தளித்த பிரசாந்த் கிஷோர் | Prashant Kishor Shared A Video Of Seeman

எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. வன்புணர்வு பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது.

பிரஷாந்த் கிஷோர் கேள்வி?

ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும் மக்களை மறக்க கூடாது. அவர்கள் செய்யும் விஷயங்களையோ மறந்து விட கூடாது. சீமான் போன்ற நபர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்களே.

அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை துன்று பிரஷாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.