தவெக ஆலோசகர் பொறுப்பில் திடீர் விலகல் - விஜய்க்கு ஷாக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்
தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார்.
தவெக
நடிகர் விஜய் தனது தவெக கட்சியின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டிருந்தார்.
அதில் விஜய்க்கு ஆதரவாக உரையாற்றியிருந்தார். அப்போது தேர்தல் வியூகங்கள், அடுத்ததாக செய்ய வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
பிரசாந்த் கிஷோர் விலகல்
ஆனால் தவெகவில் உள்ள முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் ஆலோசனைக்கு பல நூறு கோடி ரூபாயை பிரசாந்த் கிஷோர் கேட்டதாகவும் இதனால் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லையென மற்றொரு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர், பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும், நவம்பர் மாதத்திற்கு பிறகு விஜயின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.