Thursday, May 1, 2025

அது நடந்தால் மட்டும்தான் பாஜக நெருக்கடியை உணரும்.. ஆனால் அது நடக்காது - பிரசாந்த் கிஷோர் வியூகம்!

Indian National Congress BJP Lok Sabha Election 2024
By Sumathi a year ago
Report

இந்தி இதயங்களை வெல்லாவிட்டால் இந்தியாவை வெல்ல முடியாது என பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தீவிர களபணியில் இறங்கியுள்ளனர். பிரசார களமும் சூடுபிடித்துள்ளது.

prashant kishor - rahul gandhi

இந்நிலையில் முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேட்டி ஒன்றில், பாஜகவின் கோட்டைகளாக உள்ள வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் குறைந்தபட்சம் 100 இடங்களையாவது இழக்க நேரிடும் என்பதை எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸால் உறுதிப்படுத்த முடிந்தால் மட்டுமே பாஜக நெருக்கடியை உணரும்.

ஆனால் அதுவும் நடக்காது. கடந்த 5 ஆண்டுகளில் ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி ஆகியோருக்கு எதிராக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை பயணம் செய்தார் என்பதை எண்ணிப் பாருங்கள். நீங்கள் மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள்.. பிறகு நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள்?

பாஜக திரும்பிய நிதிஷ்; குறிச்சு வச்சுக்கோங்க, இதுதான் நடக்கும் - பிரசாந்த் கிஷோர் உறுதி!

பாஜக திரும்பிய நிதிஷ்; குறிச்சு வச்சுக்கோங்க, இதுதான் நடக்கும் - பிரசாந்த் கிஷோர் உறுதி!

தேர்தல் வியூகம்

கேரளாவை மட்டும் வெல்வதன் மூலம் எதிர்க்கட்சியால் நாட்டை வெல்ல முடியாது. உ.பி., பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால், வயநாட்டில் வெற்றும் எந்த பலனும் இல்லை. 2014 தேர்தலில் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தைத் தவிர உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் போட்டியிடத் தேர்வு செய்தார்.'

அது நடந்தால் மட்டும்தான் பாஜக நெருக்கடியை உணரும்.. ஆனால் அது நடக்காது - பிரசாந்த் கிஷோர் வியூகம்! | Prashant Kishor Predictions Bjp Congress Election

ஏனெனில் நீங்கள் இந்தி இதயங்களை வெல்ல முடியாவிட்டால் பெரும்பாலான இந்தியாவை வெல்ல முடியாது. காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்ஜேடி, என்சிபி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்கள் சொந்த மண்ணில் வெற்றி பெற முடியாமல் போனதால் பாஜக வெற்றி பெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.