5 முறை செல்போனை மாற்றிவிட்டேன்: கடுப்பான பிரசாந்த் கிஷோர்
தன்னுடைய செல்போனை 5 முறை மாற்றிவிட்டதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவரது நண்பர்கள், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் பல மத்திய அமைச்சர்களின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தன்னுடைய ஹேண்ட் செட் செல்போனை 5 முறை மாற்றிவிட்டேன் என்றும், இருந்தாலும் ஹேக் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 2017 லிருந்து 2021 வரை போனை யாரோ ஒட்டுக்கேட்கிறார்கள் என சந்தேகம் இருந்தது.
ஆனால் ஹேக் செய்கிறார்கள் என்று உணர முடியவில்லை என பிரசாந்த் கிஷோர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.