காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை ..அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்

By Irumporai 1 மாதம் முன்

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் பாத யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியான இன்று காந்திக்கு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு சம்பரான் மாவட்டத்தில் தனது 3,000 கிமீ நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

1917ஆம் ஆண்டில் இந்த சம்பாரான் பகுதியில்தான் இந்தியாவில் தனது முதல் சத்தியாகிரக போராட்டத்தை அண்ணல் காந்தி நடத்தினார். இதை கருத்தில் கொண்டு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிஸ்திஹாவ்ரா காந்தி ஆசிரமத்தில் காந்திக்கு மரியாதை செலுத்தி தனது சத்தியாகிரக பயணத்தை பிரசாந்த் கிஷோர் தொடங்கியுள்ளார்.

காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை ..அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர் | Prashant Kishor Gandhi Jayanthi

கடந்த சில மாதங்களாகவே பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முன்னணி தேர்தல் வியூக நிபுணராக ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் திகழ்ந்து வருகிறார்.

அரசியலுக்கு அடித்தளம்

பாஜக தொடங்கி, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமதி வரை பல கட்சிகளுக்கு இவர் தேர்தல் வியூகங்கள் அமைத்து தந்து அதில் பல வெற்றியையும் கண்டுள்ளார்.

மாநிலம் தழுவிய நடைபயணத்தை அவர் தொடங்கியுள்ளார். சுமார் 12-15 மாதங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தின் அனைத்து கிராமங்கள் மூளை முடுக்குகளுக்கு சென்று மக்களின் அடிப்படை சிக்கல்களை கண்டறிந்து அதை ஜனநாயக தளத்திற்கு கொண்டுவருவதே இந்த நடைபயணத்தின் நோக்கம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.