ரகசியமாக வைத்திருந்த தனுஷின் வீடியோவை வெளியிட்ட பிரசன்னா - ரசிகர்கள் ஆர்வம்!

Dhanush Prasanna Only Kollywood Viral Video
By Sumathi Jul 28, 2022 06:48 AM GMT
Report

தனுஷின் பிறந்தநாள் அன்று யாரும் பார்த்திராத வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நடிகர் பிரசன்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 தனுஷ்  பிறந்தநாள்

ரகசியமாக வைத்திருந்த தனுஷின் வீடியோவை வெளியிட்ட பிரசன்னா - ரசிகர்கள் ஆர்வம்! | Prasanna Wish Dhanush Birthday With Unseen Video

இன்று தனுஷ் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரசன்னா வாழ்த்து

இதை முன்னிட்டு நடிகர் பிரசன்னா இதுவரை யாரும் பார்த்திடாத தனுஷ் வீடியோ ஒன்றை பதிவு செய்து,

என் அன்பு சகோதரர் தனுஷ் மேலும் பல புதிய உச்சம் தொட வாழ்த்துக்கள். அவரின் பிறந்தநாளில் இதை விட வேறு எதை ஷேர் செய்ய முடியும். இதை ஷேர் செய்ததற்காக என்னை கொல்லாதீங்க ப்ரோ.பல காலமாக இதை என்னுடன் வைத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரசன்னா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்ளோ அழகா வாசிக்கிறாரு.. எல்லா திறமையும் ஒரு மனுசனுக்கு இருக்கும்னா அது தனுஷ் தான் என்று அவரை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.