Prank வீடியோ எடுத்தால் நடவடிக்கை - யூடியூப் சேனல் முடக்கப்படும்
Youtube
Coimbatore
By Thahir
கோவை மாநகரப்பகுதிகளில் Prank வீடியோ எடுத்து பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் இயல்வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாக்குவோர் மீது சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் Prank வீடியோ என்ற பெயரில் வரம்பு மீறிய செயல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prank வீடியோ எடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களது யூடியூப் சேனல்கள் முடக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.