கர்ப்பமாக இருக்கிறேன்... கணவர் பிறந்தநாளில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன பிரபல நடிகை

By Petchi Avudaiappan Apr 11, 2022 11:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல நடிகை பிரனீதா சுபாஷ் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்ப்பமாக இருக்கிறேன்... கணவர் பிறந்தநாளில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன பிரபல நடிகை | Pranitha Subhash Announce Her Pregnancy

தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரனீதா சுபாஷ் தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து  கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’, சூர்யா நடிப்பில் வெளியான “மாசு என்கிற மாசிலாமணி”, அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்து பிரபலமானார். 

இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இவர்களது திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், என் கணவரின் 34வது பிறந்தநாளான இன்று கடவுள் எங்களுக்கு தந்த வரம் என்றும் பிரனீதா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.