நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன், ஆனால் கன்னியாகுமரியில் மோடி...பிரகாஷ்ராஜ்!

Prakash Raj M Karunanidhi Narendra Modi Chennai Kanyakumari
By Swetha Jun 01, 2024 11:08 AM GMT
Report

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி செய்யும் தியானம் குறித்து பிரகாஷ் ராஜ் விமர்ச்சித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் 

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், என்னை அன்பாக பார்த்த ஒரு மனிதர் கலைஞர்.

நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன், ஆனால் கன்னியாகுமரியில் மோடி...பிரகாஷ்ராஜ்! | Prakashraj Slams Modi

50% இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வரும் நிலையில் எப்போதோ 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர். கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை. கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை.

மோடி

என்னிடம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னார், கலைஞர் இல்லை என்றால் நான் ஐஏஎஸ் அதிகாரி ஆகியிருக்க முடியாது. சாதியை வைத்தோ, பணத்தை வைத்தோ அரசியல் செய்வது வேறு. ஆனால் கலைஞர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர்.

நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன், ஆனால் கன்னியாகுமரியில் மோடி...பிரகாஷ்ராஜ்! | Prakashraj Slams Modi

கலைஞர் இருந்தார் என்ற செய்தியை விட அவர் ஏன் கலைஞர் ஆனார் என்ற செய்திதான் முக்கியம் என்று நெகிழ்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், நான் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். மக்கள் அதை காண வருவார்கள். ஆனால் கன்னியாகுமரியில் நடைபெறும் ஷுட்டிங்கில் பிரதமர் மோடியே, பார்வையாளர்களை கூட்டிச் செல்கிறார் என பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.