Friday, Jul 25, 2025

‘’நீ இப்போ சப்பையாயிட்ட டீ ‘’ பிரகாஷ் ராஜ் போட்ட ட்வீட், வைரலாகும் தக்காளி மீம்

twitter prakashraj tomatomeme
By Irumporai 4 years ago
Report

தொடர் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தற்போது தடைப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளிக்கு மவு அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை விடவும் தக்காளியின் விலை தாறுமாறாக அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பான நகைச்சுவை மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சிங்கம் படத்தில் சூர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் இருவருக்குமான காட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட தக்காளி மீம் புகைப்படம் ட்விட்டரில் வைரலானது.

அந்த மீம் பதிவில்,  சூர்யாவை பெட்ரோல் விலையாகவும் , பிரகாஷ் ராஜை தக்காளி விலையாகவும் சித்தரித்த கிரியேட்டர் . பிரகாஷ் ராஜ் அதாவது தக்காளி பெட்ரோல் விலையை பார்த்து ‘நீ சப்ப ஆயிட்ட டி ‘ என கூறுவது போல உருவாக்கியுள்ளார்.

இதனை ரசித்த பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து “இதை யார் செய்தது...சும்மாத்தான் கேட்டேன்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரகாஷ் ராஜ் நடிப்பு மட்டுமல்லாது அரசியல் ஆர்வமும் கொண்டவர்.அவ்வபோது இவர் பேசும் கருத்துகள்  அரசியல் அரங்க முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.