சந்திரயான் 3 குறித்து நக்கல்...கடுமையாக விமர்சிக்கப்படும் பிரகாஷ் ராஜ்

Prakash Raj BJP
By Karthick Aug 21, 2023 06:12 AM GMT
Report

சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் குறித்து கிண்டலடித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ள நிலையில், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

சந்திரயான் பயணம்  

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம் சென்ற மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டது.

prakash-raj-mocks-chandriyan-3-journey

சென்ற 16ஆம் தேதி அது நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டதுடன், விண்கலத்தின் லேண்டர் அமைப்பான விக்ரம் தனியே பிரிந்தது. நாளை மறுநாள் நிலவின் மேற்பரப்பில் இந்த லேண்டர் தரையிரங்க உள்ளது.

அதன் பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பிரகாஷ் ராஜ் கிண்டல்   

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம் என கார்ட்டூன் படம் ஒன்றை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நபர் ஒருவர் சுற்றி வளைத்து டீ ஆற்றும் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து அவர், “ப்ரேக்கிங் செய்தி, விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்” என பதிவிட்டுள்ளார்.

இது பாஜக அரசை கேலி செய்யும் வகையில் தான் அவர் பதிவிட்டுள்ளார் என கூறப்பட்டாலும், அவரின் இந்த பதிவை தற்போது பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சந்திரயான் என்பது இந்தியாவே பெருமை கொள்ளும் ஒரு திட்டம் அதை வைத்து இப்படி அரசியல் செய்கிறீர்களே என அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். அவரின்