நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.., சாதனை படைத்த பிரக்ஞானந்தா

Chess Norway
By Yashini Jun 06, 2026 06:10 AM GMT
Report

பிரக்ஞானந்தா நார்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற இந்த தொடரின் 10 சுற்றுகளும் நிறைவடைந்தன.

இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சன், வின்சென்ட் கெய்மர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.., சாதனை படைத்த பிரக்ஞானந்தா | Praggnanandhaas To Win The Norway Chess Title

இதனைதொடர்ந்து, 9வது சுற்றில் தமிழக வீரர் குகேஷை, பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, மொத்தம் 18 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.