மரியாதை கொடுக்க மாட்டியா : வில்லங்கமாக மாறிய பிரதீப் ரங்கநாதனின் பதிவு ?
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தை பாராட்டி பிரதீப் ரங்கநாதன் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை என்கிற திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது இதில் நடிகட் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார்.
விடுதலை திரைப்படம் வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனையும், விடுதலை படக்குழுவினரையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
Viduthalai is just Extraordinary .
— Pradeep Ranganathan (@pradeeponelife) April 4, 2023
My best wishes to Director Vetrimaran and team
சிக்கிய பிரதீப்ரங்கநாதன்
அந்த வகையில் லவ் டூடே படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனும் விடுதலை படம் குறித்து ட்விட் செய்திருந்தார். அதி்ல் இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவில் இயக்குனர் வெற்றிமாறன் என்று மட்டும் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி வெற்றிமாறனை சார்னு கூப்பிட மாட்டியா மரியாதை கொடுக்க மாட்டியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
