என்னால் முடியல... - வாய்ப்பு கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப்பை பயங்கரமா திட்டித் தீர்த்த நடிகை - நடந்தது என்ன...?

Love Today Pradeep Ranganathan
By Nandhini Dec 12, 2022 01:35 PM GMT
Report

வாய்ப்பு கொடுத்த ‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப்பை பயங்கரமா நடிகை ஆனந்தி திட்டித் தீர்த்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

‘லவ் டுடே’ பிரதீப்

ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், அவரே இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இயக்குநர் பிரதீப்பை திட்டித் தீர்த்த நடிகை

இந்நிலையில், ‘லவ் டூடே’ பட இயக்குநர் பிரதீப்பை நடிகை ஒருவர் நன்றாக திட்டித் தீர்த்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பிரதீப்பின் முதல் படமான ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர் தான் ஆனந்தி.இவர் வானொலி ஒன்றில் ஆர்.ஜே.வாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பட வாய்ப்பு கொடுத்த பிரதீப்பையே இவர் திட்டி தீர்த்துள்ளார்.

இது குறித்து ஆனந்தி பேசுகையில்,

‘லவ் டுடே’ படத்தில் ஆண்கள் நல்லவர்களாகவும், பெண்களை கெட்டவர்களாகவும் காமெடி என்ற பெயரில் இயக்குநர் பிரதீப் காண்பித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகி தங்கைக்கு பிரதீப் மெசேஜ் அனுப்பவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். இதில் இவர் நல்லவர். ஆனால் பிரபல நடிகையை பதம் பார்க்கணும் என்று சொல்லும்போது, இதை காமெடி என்று ரசிகர்கள் எப்படி நினைக்கிறார்கள்.

இப்படி பெண்களை சினிமாவில் தவறாக சித்தரிப்பதை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறதோ என்று கடுமையாக பிரதீப்பை விமர்சனம் செய்துள்ளார். 

pradeep-ranganathan-love-today-anandhi