ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இயக்குநர் - ஆச்சரியத்தில் திரையுலகம்
பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரம்மாண்ட திரையரங்குகளுக்கு பெயர்போன ஏஜிஎஸ் நிறுவனம் முதன் முறையாக 2006ஆம் ஆண்டு திருட்டுப்பயலே படத்தின் மூலம் தயாரிப்பிலும் அடி எடுத்து வைத்தது. தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம்,மாசிலாமணி, மதராசபட்டினம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, எங்கேயும் காதல், யுத்தம் செய், கவண், மாற்றான், இரும்புத்திரை, அனேகன், தனி ஒருவன், திருட்டுப்பயலே 2, மற்றும் பிகில் போன்ற வெற்றி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே ஏஜிஎஸ் நிறுவனம் முதல்முறையாக ஹீரோவாக ஒருவரை அறிமுகம் செய்ய உள்ளது.கோமாளி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதுடன் அப்படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறது .
பிரதீப் ரங்கநாதன் இதற்க்கு முன்னாள் ஹீரோவாக பல குறும்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .