நீங்க ரொம்ப கேவலமா இருக்கிறீங்க... - உருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த இயக்குநர் பிரதீப்
நீங்க ரொம்ப கேவலமா இருக்கிறீங்க என்று உருவ கேலி செய்தவருக்கு இயக்குநர் பிரதீப் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குநர் பிரதீப்
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் கவனம் ஈர்த்து வருகிறார். இயக்குநர் பிரதீப் ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
‘கோமாளி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரதீப். இப்படத்தில் ஹீரோவாக பிரதீப் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கேவலமா இருக்கிறீங்க..
இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி எப்படி இருக்கீங்க என்று பிரதீப்பிடம் கேட்க, அவர் வித்தியாசமான உடல் மொழியைக் காட்டி சூப்பரா இருக்கேங்க என்று கூறினார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் பிரதீப்பை கேவலமா இருக்கீங்க என்று கிண்டலடித்து உருவ கேலி செய்தனர்.
தக்க பதிலடி கொடுத்த இயக்குநர் பிரதீப்
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பிரதீப் பேசுகையில், நான் கேவலமாக இருக்கிறேன் என்று நான் சிறுவயது முதலே கேட்டு வருகிறேன்.இது எனக்கு புதுசு கிடையாது. ஆனால் இந்த மேடையில் நான் நிற்பது எனக்கு புதுசு என்றார்.
முன்னதாக குடும்பத்தில் நான் மூத்தவன். முதல் ஸ்டெப் தாண்டா கஷ்டமா இருக்கும். அதற்கு அப்புறம் மத்ததெல்லால் ஈஸிதான். எப்படியாச்சும் மேல ஏறிவந்துருங்கடா என்று பேசினார்.