படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க? பிரபுதேவா கோபம்

Prabhudeva Ponmanickavel Ott release
By Petchi Avudaiappan May 19, 2021 08:23 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள பொன்மணிக்கவேல் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடனம், நடிப்பு, இயக்கம் என பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ள பிரபுதேவா கடந்த சில வருடங்களாக நடிப்பிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் நேசமிந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியான பிரபுதேவா நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க? பிரபுதேவா கோபம் | Prabudeva Ponmanikavel Movie Updated News

இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனாவால் அது தாமதமாகி போனது. 

இந்நிலையில் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வருவதால் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியிட பிரபுதேவா வலியுறுத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பிரபுதேவா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.