நயன்தாரா ரொம்ப மோசம்; எங்க பாத்தாலும் அடிப்பேன் - பிரபுதேவா முன்னாள் மனைவி!
நயன்தாரா குறித்து பிரபுதேவாவின் முன்னாள் மனைவி முன்னதாக பேசிய தகவல் வைரலாகி வருகிறது.
நயன்தாராவுடன் உறவு
பிரபுதேவாவை காதலித்து கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் ரம்லத். பிரபுதேவாவுக்காக இவர் இந்து மதத்திற்கு மாறி தன் பெயரை லாதா என மாற்றிக்கொண்டார்.
இதற்கிடையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த ரம்லத், அப்போது தன் கணவருக்காக போராட்டத்தில் இறங்கினார். தொடர்ந்து அந்த சமயத்தில் ரம்லத், நயன்தாரா மற்றும் பிரபுதேவா பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் பேட்டி
அவர் பேசுகையில், நயன்தாராவை காதலிக்கிறார் என் கணவர் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு நல்ல கணவர். 15 ஆண்டுகளாக எங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். அண்மையில் தான் வீடு வாங்கிக் கொடுத்தார். ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது.
என் கணவர் நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த பெண்ணின் கணவரை திருடும் பெண் நயன்தாரா. அவரை நான் எங்காவது பார்த்தால் நிச்சயம் அடிப்பேன். ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அவரே சிறந்த உதாரணம் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்பின் நயன்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்தனர். மூன்றரை ஆண்டுகளாக நீடித்த உறவு முறிந்தது. இதனையடுத்து பிரபுதேவா ரம்லத்தை விவாகரத்து செய்தார். 2020ல் டாக்ர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து 2வதாக திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.