செயற்கை காலுடன் பிரபுதேவா ... அதிர வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

PoikkalKuthirai actor prabhudeva பொய்க்கால் குதிரை
By Petchi Avudaiappan Aug 04, 2021 10:00 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 ‘இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ஹர ஹர மஹாதேவகி', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்ததாக நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவுடன் இணைந்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

முறுக்கேறிய உடலுடன், கையில் இரும்புக் கம்பியை வைத்துக்கொண்டு செயற்கைக் காலுடன் குழந்தையைக் காப்பாற்றும் சண்டைக் காட்சியில் பிரபுதேவா இருப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பொய்க்கால் குதிரை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக்களம் என கூறப்படுகிறது.