சசிகலாவினை சந்தித்த பிரபு: சந்திப்பில் நடந்தது என்ன?

actor sasikala Dhinakaran
By Jon Mar 02, 2021 01:37 PM GMT
Report

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்ற நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.  

சசிகலாவினை சந்தித்த பிரபு: சந்திப்பில் நடந்தது என்ன? | Prabhu Who Met Sasikala What Happened Meeting

அந்த வகையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களர்களிடம் பேசிய நடிகர் பிரபு உறவினர் என்னும் முறையில் நலம் விசாரிக்க வந்ததாகவும் தற்போதுசசிகலா நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சரத்குமார் - ராதிகா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல பிரபலங்கள் சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.