Friday, Jul 18, 2025

மறுபடியும் “சிங் இன் தி ரெயின்''' : இணையத்தில் வைரலாகும் வடிவேலு பிரபு தேவா வீடியோ

Vadivelu PrabhuDeva SingintheRain
By Irumporai 3 years ago
Report

பிரபு தேவா தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுடன் இணைந்துள்ள வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

இந்த படத்தில்  சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக உள்ளார் ,மேலும் இந்த படத்தில் வடிவேல் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபு தேவா தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலுவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலு பாடிய 'சிங் இன் தி ரெயின்' பாடலை பாடுகிறார்.

இறுதியில் இருவரும் கட்டியணைத்துக்கொள்கின்றனர். இந்த வீடியோவுக்கு கேப்சனாக 'நட்பு' என பிரபு தேவா குறிப்பிட்டுள்ளார். கடந்த கால நினைவுகளை பகிரும் வகையிலான இந்த வீடியோவை இணையவாசிகள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.