விஜய்யுடன் 13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பிரபலம் - ரசிகர்கள் உற்சாகம்

Prabhu Deva Vijay
By Petchi Avudaiappan May 21, 2022 07:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

விஜய்யின் 66வது படத்தில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், நடிகைகள் சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப கதையில் விஜய் நடிப்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே 2 ஆம் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். 

இந்நிலையில் தளபதி 66 படத்தில் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக போக்கிரி மற்றும் வில்லு படங்களில் விஜய்யுடன் பிரபுதேவா பணியாற்றியிருந்த நிலையில் தற்போதைய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தளபதி 66 படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.