50 வயது நடிகையுடன் காதல்? ரொம்ப தப்புங்க - கொந்தளித்த பிரபல நடிகர்!
50 வயது நடிகையை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு நடிகர் பிரபாஸ் சீனு பதிலளித்துள்ளார்.
நடிகை துளசி
சகலகலா வல்லன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துளசி(50). நல்லவன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, தென்னிந்திய சினிமாவில் முக்கிய குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வரிசையில், ரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் சீனுவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது.
காதல் வதந்தி
அதனையடுத்து, சமீபத்தில் நடிகர் பிரபாஸ் சீனு அளித்த பேட்டி ஒன்றில், 50 வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்தியை பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. துளசி எனக்கு அம்மா போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் என்மீது அக்கறையோடு நடந்துகொள்வார்.
இது ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவு. அவர் ஒரு சிறந்த நடிகை. வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். எங்களை பற்றி பரவிய வதந்தியை என் மனைவியிடம் சொன்னேன்.
இதை கேட்டு அவர் சிரித்தார். என் மனைவி மிகவும் பக்குவமானவர். இதுபோன்ற வதந்திகளை அவர் காதில் வாங்கிக்கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.