பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பால் - சிக்கலில் மாட்டிய பழ.நெடுமாறன்

Sri Lanka Pazha Nedumaran
By Thahir Feb 14, 2023 09:23 AM GMT
Report

விடுதலைப் புளிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் நேற்று பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்தது.

ஒரு புறம் நம்ப முடியாததாக இருந்தாலும், மறுபுறம் பழ.நெடுமாறனின் கருத்தை புறம் தள்ளிவிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு பிரபாகரன் குறித்த தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Prabhakaran is alive - Fruit in trouble. Nedumaran

இந்த நிலையில் க்யூ பிரிவு போலீசார் பிரபாகரன் பற்றி தகவல்களை திரட்ட தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.

அப்பிரிவு ஐஜி செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

திரட்டப்படும் ஆவணங்கள் 

பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிரபாகரன் குறித்து தகவல் வெளியிட்ட பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவுப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் உளவுப் பிரிவு அதிகாரிகள்.