வேட்பாளர் பெயரை மாற்றிக் கூறிவிட்டு சாமர்த்தியமாக சமாளித்த குட்டி கேப்டன்
திண்டுக்கல் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார் விஜய பிரபாகரன். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார். விஜயகாந்த் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்குமாருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். உடனே கூடியிருந்த தொண்டர்கள் வேட்பாளரை மாற்றி சொல்கிறீர்கள் என கூச்சலிட்டனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட விஜயபிரபாகரன் நீங்கள் எல்லாம் என் பேச்சை சரியாக கவனிக்கிறீர்களா? என்று சோதித்து பார்த்தேன் என சமாளித்தார். அதன் பிறகு வேட்பாளர் பெயரை சரியாக கூறி வாக்கு சேகரித்தார்.