விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - பின்னணி என்ன?
Thiruvarur
By Sumathi
பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.ஆர். பாண்டியன்
திருவாரூர், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடிய பொழுது பொதுச்சொத்தை சேதப்படுத்தியது

உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கு இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
இந்நியைலில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.