கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவு

Earthquake Powerful Shakes
By Thahir Dec 26, 2021 10:14 PM GMT
Report

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் நேற்று கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. முதலில் மதியம் 3.15 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக நிலநடுக்கம் பதிவானது.

கார்பதோஸ், காசோஸ், ரோட்ஸ் மற்றும் சந்தோரிணி உள்ளிட்ட தீவுகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாலை 6.59 மணியளவில் இரண்டாவது முறையாக 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.