ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

earthquake tsunami world japan
By Jon Mar 21, 2021 02:00 PM GMT
Report

வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமும் இரண்டாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்தது, இந்த மையம் (ஈ.எம்.எஸ்.சி) 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. மக்கள் அதிர்ச்சி அடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமும் இரண்டாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்தது, இந்த மையம் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. மக்கள் அதிர்ச்சி அடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.