துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் ஓட்டம்..!
Turkey
Earthquake
By Thahir
துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பிரிட்டன், லெபனான், ஈராக் உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு துருக்கியின் காலியென்டெப் பகுதியில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன, இதனால் மக்கள் எல்லாரும் கட்டடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் இறங்கினர்.