நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
New Zealand
By Thahir
நியூசிலாந்தில் ஒரு தீவில் 7.1 ரிக்ட்ர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் உள்ள ஒரு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அளவானது 7.1 ரிக்டர் என பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் USGS தகவல் அளித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.