அரசு மருத்துவமனையில் திடீர் மின்சார தடையால் பரபரப்பு

hospital patient powercut fault
By Praveen Apr 18, 2021 01:19 PM GMT
Report

விருத்தாசலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், ஓவர்லோடு காரணமாக மின்சார தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது.

விருத்தாசலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பிரிவில், சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் உள்ளன.

நேற்று இரவு 7:00 மணியளவில், ஓவர் லோடு காரணமாக இப்பிரிவில் பயன்பாட்டில் இருந்த 15க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பழுதாகி வளாகம் இருளில் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட சாதனங்கள் பழுதின்றி தப்பின.

தகவலறிந்து வந்த ஊழியர்கள் பழுதான மின் விளக்குகளை அகற்றி, புதிதாக விளக்குகளை பொறுத்தினர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நோயாளிகள் அவதியடைந்தனர்.