படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன் : தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்

hoaspital powerstarsrinivasan
By Irumporai Sep 29, 2021 05:51 AM GMT
Report

2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் லத்திகா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் திரைத்துறையில் பிரபலமாகவில்லை  நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரை படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

இதன்பிறகு பிறகு கோலி சோடா, மெர்லின், என்ன தவம் செய்தானோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.

இந்நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு ஒன்றில் நடித்தபோது அதிக காற்றழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.