நிலக்கரி தட்டுப்பாட்டால் துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..!
நிலக்கரி தட்டுப்பாட்டால் துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையத்தில் உள்ள 1,3,5 ஆகிய அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனல் மின் நிலையத்தில் உள்ள 2 அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் நிலக்கரியை மத்திய அரசு முறையாக வழங்காத காரணத்தினால் தான் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின் தடை நேற்று பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலையில் தற்போது துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.