பவர் கட்டா ? ஒரு வேளை அணில் ஓடியிருக்கும் ..அண்ணாமலை கிண்டல்!
திமுக ஆட்சியை ஆரம்பித்ததிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதே சமயம் திமுக ஆட்சி ஆரம்பமானதில் இருந்தே தமிழகத்தில் மின்தடை தொடங்கி விட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்திது மத்திய அரசின் சட்டங்கள் குறித்து தமிழ் கையேடுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்
. அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது இது குறித்து கமெண்ட் அடித்த அண்ணாமலை ஒரு வேளை அணில் ஓடியிருக்கும் என்று கிண்டலுடன் கூற அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
ஏற்கனவே மின்சார தடை குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலஜி மின் தடைக்கு அணில்தான் காரணம் என கூறியது தமிழக அரசியலில் விவாதமானது குறிப்பிடத்தக்கது.