‘’ இனிமே ஜெனரேட்டர் வேணும் மக்களே ‘’ : அண்ணாமலை கிண்டல்

generator annamalai bjptamilnadu
By Irumporai Mar 16, 2022 10:13 AM GMT
Report

மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என்பதை நான் ஏற்கமாட்டேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இது திமுகவிற்காகவோ அல்லது அவர்களின் பணிக்காகவோ அனுப்பி வைப்பதாக ஆளுநர் சொல்லவில்லை எனகூறினார். மக்கள் வீடுகளில் ஜெனரேட்டர்களை வாங்கி வையுங்கள்: பிஜிஆர் எனர்ஜி என்ற தகுதியே இல்லாத நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது.

கோபாலபுரத்தில் தொடர்பு இருப்பதாலேயே பிஜிஆர் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி அடிக்கடி தமிழ்நாட்டில் மின்வெட்டு வரலாம். மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.