தமிழகத்தில் ஓரிரு தினங்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது - அமைச்சர் செந்தில்பாலாஜி..!
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்ற மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு நாளைக்கு தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ள நிலையில் 48 ஆயிரம் டன் முதல் 50 ஆயிரம் டன் மட்டுமே கிடைப்பதால் மின் பற்றாக்குறை உள்ளது என்றார்.
மேலும் மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 716 மெகாவாட் மின்சாரம் வராததும் மின் தடைக்கு காரணம் எனவும் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த செந்தில்பாலாஜி மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மலிவு விலையில் விளம்பரத்தை அண்ணாமலை செய்து வருவதாக தெரிவித்தார்.