குழந்தைக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது பவர் கட் - பதறிய போன மருத்துவர்கள்
மருத்துவமனையில் குழந்தையின் அறுவை சிகிச்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பேட்டரி விளக்குகளின் வெளிச்சத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா நவம்பர் 15ம் தேதி உக்ரைன் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் மின்சார சேமிப்பு யூனிட் கிடங்குளில் ஏரியாக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
மேலும் உக்ரைனின் தலைநகரான கியூவ் உட்பட பிற நகரங்களில் மின்சாரம் விநியோகம் இல்லாம் ஸ்தம்பித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் மின்சார கட்டமைப்புகளை குறி வைத்து ஏவுகணைகளை வீசி வருகின்றது. இதனால் உக்ரைன் தலைநகரம் இருளில் மூழ்கியுள்ளது.

மீண்டும் மின்சாரத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளில் உக்ரைன் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அறுவை சிகிச்சையின் போது மின்சாரம் துண்டிப்பு
மருத்துவமனைகளுக்கு கூட இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் உக்ரைன் தலைரநகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போதே மின்சாரம் தடைபட்டதால் பேட்டரி விளக்குகளைக் கொண்டு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர்களின் திறமையால் குழந்தைக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.