அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் என்ன ? - விளக்கம் கொடுத்த மின் பகிர்மான கழகம்
அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை எதேச்சையாக நடந்தது என்று மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
அமித்ஷா சென்னை
சென்னைக்கு நேற்றிரவு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்தபோது அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவரை வரவேற்க ரோட்டில் இருபுறமும் திரண்டிருந்த பா.ஜ.க.வினர் இதனால் கடும் ஆவேசம் அடைந்தனர். அமித்ஷா அங்கிருந்து சென்றதும் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மின் தடை
அரசு திட்டமிட்டு மின்சப்ளையை துண்டித்ததாக கூறி சாலைமறியலிலும் ஈடுபட்டனர். வி.ஐ.பி. வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் உடனடியாக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. உடனே மின் உற்பத்தி மின்பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்லக்கானி போரூர் துணைமின் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

தாம்பரம்-கடப்பேரி மின்நிலையத்தில் இருந்து போரூர் துணைமின் நிலையத்துக்கு வரும் மின்கம்பி காற்று மழை காரணமாக அறுந்து விழுந்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதனால் 40 நிமிடத்துக்கு பிறகு மாற்று ஏற்பாடு மூலம் பரங்கிமலை பகுதிகளுக்கு மின்சப்ளை கொடுக்கப்பட்டது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan