மின் தடை குறித்து அவதுாறு பரப்பினால் நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை..!
மின் தடை குறித்து அவதுாறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் அரசு மாவட்ட பழைய தலைமை மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நிலக்கரி தட்டுப்பாடு நீடிப்பதாக தெரிவித்தார். தேவை இருந்து கொண்டே உள்ளதால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப். 28ம் தேதி) அதிகப்பட்ச மின் நுகர்வாக 17,380 மெகாவாட் பயன்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (ஏப். 29ம் தேதி) 17,543 மெகாவாட் என அதிகப்பட்ச நுகர்வு நடைபெற்றுள்ளது.
தேவை அதிகரித்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டு மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கண்காணிப்பில் சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் சனிக்கிழமைக்கு பிறகு மின் விநியோகத்தில் தடையில்லை என்றார். மேலும் அவர் தமிழகத்தின் அதிகப்பட்ச மின் நுகர்வாக நேற்று (ஏப். 29ம் தேதி) 17,543 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மின் தேவை 17,543 மெகாவாட்டாக அதிகரித்த நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தடங்களின்றி சீராக மின் விநியோகம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்கில் உண்மைக்கான மாறான பொய்யான தகவல்களை பதிவிட்டு மக்களிடம் பரப்பினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்கவேண்டாம்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.