விமானத்தில் தீப்பிடித்த பவர் பேங்க்.. பதறிய பயணிகள் : வைரலாகும் வீடியோ

Viral Video Singapore
By Irumporai Jan 12, 2023 12:13 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தைவானிலிருந்து சிங்கப்பூர் புறப்படத் தயாரான விமானத்தில் போன் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

  தீப்பிடித்த பவர் பேங்க்

இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். மேலும் தீப்பிடித்ததில் விமானம் முழுவதும் புகை நிரம்பியதால் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்தனர். பதறிய பயணிகளை பணிபெண்கள் அமைதிபடுத்தினர்

இதனையடுத்து விமானத்தில் இருந்த 189 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றபட்டனர். 

விமானத்தில் தீப்பிடித்த பவர் பேங்க்.. பதறிய பயணிகள் : வைரலாகும் வீடியோ | Power Bank Fire Singapore Flight Passengers Panic

வைரலாகும் வீடியோ

காயமடைந்த இருவரும் சிகிச்சை முடிந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தீ அணைக்கப்பட்ட பின்பு முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விமானம் மீண்டும் புறப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.