நாளை மறுநாள் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

postponement tomorrow tnpscexam
By Irumporai Jan 07, 2022 11:07 AM GMT
Report

நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு & ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை  திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.